ஈரான் தலைவர் மொஜ்தபா காமேனி கவலைக்கிடம்? சர்வதேச அரசியலில் பரபரப்பு!
ஈரான் நாட்டின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமேனி கடுமையான உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் தற்போது மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த சில தினங்களாகவே ஈரானிய உயர்மட்ட ஆட்சி வட்டாரங்களில் இது குறித்த தீவிர வாதங்கள் பரவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தனது தந்தையான அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இவர் அப்பதிறிக்கு வந்தார். ஆனால் பதவியேற்றது முதல் அவர் இதுவரை எந்தவொரு பொது நிகழ்ச்சிகளிலும் நேரில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவரிடமிருந்து வரும் அனைத்துத் தகவல்களும் எழுத்துப்பூர்வமான அறிக்கைகளாக மட்டுமே வெளியிடப்பட்டு வந்தன.
இந்தச் சூழலில் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ளதாக வெளியாகி உள்ள தகவல்கள் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஈரானிய அரசின் முக்கியப் பிரமுகர்களும் இது குறித்து வெளிப்படையாகப் பேசத் தயங்கி வரும் நிலையில், நிலைமை தீவிரமாகி வருவதாகக் கூறப்படுகின்றது. தொடரும் இந்த மருத்துவ நெருக்கடியால் அங்கு நிலவும் அரசியல் சூழல் மேலும் பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது.