அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் ஒன்றுபட வேண்டும் - ஈரான் உச்ச தலைவர் அழைப்பு!
Aug 31, 2026, 06:40 IST
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை எதிர்த்து அனைத்து இஸ்லாமிய நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா மொஜ்தபா காமேனி அழைப்பு விடுத்துள்ளார்.
இஸ்லாமிய மதத் தலைவர்களுக்கு ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா மொஜ்தபா காமேனி எழுதியுள்ள கடிதத்தில், முஸ்லிம் நாடுகள் தங்களின் உண்மையான எதிரிகளாக அமெரிக்காவையும் இஸ்ரேலையும் அடையாளம் கண்டு அவற்றின் சதித் திட்டங்களை எதிர்க்க ஒன்றுபட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். தனது தந்தையின் கொலைக்குத் தகுந்த பழிதீர்க்கப்படும் என்று அவர் மீண்டும் எச்சரித்துள்ளார்.
எதிரி நாடுகளின் தொடர் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் ஒரே அணியாகத் திரண்டு நிற்க வேண்டியதன் அவசியத்தை அவர் இந்தக் கடிதத்தின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.