undefined

குருவாயூர் கோவிலில் தங்க ஆபரணங்களில் முறைகேடு?.. 40 ஆண்டுகளுக்கு பின் வெளியான அதிர்ச்சி!

 

கேரளாவின் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் காணிக்கையாக வழங்கப்பட்ட தங்கம், வெள்ளி பொருட்களில் பெரிய அளவிலான முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதாக சமீபத்திய தணிக்கை அறிக்கை வெளிச்சம் போட்டுள்ளது. குறிப்பாக, கடந்த 40 ஆண்டுகளாக கோவிலில் எந்தவித தணிக்கைச் செயல்முறைகளும் நடைபெறாதது இந்த அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.

குருவாயூர் தேவஸ்தானம் நிர்வகிக்கும் கோவிலில், பக்தர்கள் வழங்கும் தங்க கிரீடம், வெள்ளி ஆபரணம், பாத்திரங்கள் மற்றும் புன்னத்தூர் யானை முகாமில் கிடைக்கும் தந்தங்கள் உள்ளிட்ட விலைமதிப்பற்ற பொருட்களுக்கு சரியான பதிவுகள் பராமரிக்கப்படவில்லை என 2019-20 ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை குற்றம் சாட்டுகிறது.

அந்த அறிக்கையில், 522.86 கிலோ தந்தங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்கள் வனத்துறைக்கு ஒப்படைக்கப்படாமல் இருப்பது, 2.65 கிலோ எடையுள்ள வெள்ளி பாத்திரம் மாற்றாக 750 கிராம் கொண்ட பாத்திரம் பதிவு செய்யப்பட்டிருப்பது, பக்தர்கள் செலுத்திய காணிக்கை பண ரசீதுகள் முறையாக வழங்கப்படாதது, குங்குமப்பூ மற்றும் குன்றிமணி மூட்டைகள் கையிருப்பில் இல்லாமை உள்ளிட்ட விபரங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

தேவஸ்தான சட்டப்படி, ஆண்டுதோறும் கோவில் நிர்வாகி தங்கம், வெள்ளி உள்ளிட்ட அனைத்து விலைமதிப்புள்ள பொருட்களையும் நேரடியாக சரிபார்க்க வேண்டியது கட்டாயமாக இருந்தும், அது பல தசாப்தங்களாக பின்பற்றப்படாதது அறிக்கையில் கண்டனம் செய்யப்பட்டுள்ளதாம்.

சமீபத்தில் சபரிமலை அய்யப்பன் கோவிலில் தங்க கவச முறைகேடு குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இப்போது குருவாயூர் கோவிலிலும் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் வெளிவந்ததால் பக்தர்களிடையே அதிர்ச்சி உருவாகியுள்ளது. தேவஸ்தான நிர்வாகம் இந்த விவகாரம் தொடர்பாக என்ன நிலைப்பாடு எடுக்கிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?