ரீல்ஸ்க்காக 'தூய்மை தேவதைகள்' எனப் புகழாரம் சூட்டினால் போதுமா? - டிடிவி தினகரன் கேள்வி!

 

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்கள் விவகாரத்தில் தமிழக அரசுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த 15 நாட்களுக்கும் மேலாகத் தொடர்ந்து போராடி வரும் தூய்மைப் பணியாளர்களைச் சமூக வலைதளங்களில் ரீல்ஸ்களுக்காக "தூய்மை தேவதைகள்" என்று புகழாரம் சூட்டினால் மட்டும் அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட்டுவிடுமா என்று டிடிவி தினகரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

தூய்மைப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல், அவர்களைத் தொடர்ந்து வீதிகளில் போராட விடுவது எந்த விதத்தில் நியாயம் எனவும் அவர் சாடியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளின்படி உடனடியாகச் செயல்பட வேண்டும் என்றும் அவர் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.