undefined

அதுக்காக இப்படியா? - தனது நிர்வாண படத்தை அப்படியே சமூக வலைதளத்தில் வெளியிட்ட பிரபல நடிகை !!

 

பிரபல ஹாலிவுட் நடிகை ஹாலி பெர்ரி (56). அமெரிக்காவை சேர்ந்த நடிகை ஹாலி பெர்ரி, ஒரு மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பல அழகுப் போட்டிகளில் பங்கேற்றார். மிஸ் யுஎஸ்ஏ போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார் மற்றும் மிஸ் வேர்ல்ட் 1986 - இல் ஆறாவது இடத்தைப் பிடித்தார். அதன்பின்னர் ஹாலிவுட் பக்கம் திரும்பினார்.

தொடர்ந்து சூப்பர் ஹீரோ படமான கேட்வுமன் மற்றும் ஜேம்ஸ் பாண்ட் படம் டை அனதர் டே படம் மூலம் மேலும் பிரபலமானவர். 2002 இல் சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதையும் வென்று உள்ளார். தற்போது நடிகை சமூகவலைதளத்தில் பகிர்ந்து உள்ள படம் வைரலாகி உள்ளது.

வீட்டின் பால்கனியில், நிர்வாண கோலத்தில் நின்று மது அருந்திக்கொண்டிருக்கும் படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளார். 56 வயதான நடிகை, நான் செய்ய விரும்புவதை நான் செய்கிறேன், என்ற தலைப்புடன் படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி உள்ளது.