ராஜபாளையத்தில் இதனால தான் கெளதமிக்கு சீட் மறுப்பா?! - வெளியான பலே காரணம்!

 

கடந்த முறையே கெளதமி ராஜபாளையத்தில் சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தார். இம்முறை கெளதமிக்கு ராஜபாளையத்தில் வாய்ப்பு கிடைக்கும் என்றே எதிர்பார்த்திருந்தார்கள். எடப்பாடியும், தேர்தல் பணிகளைப் பார்க்க சொன்னதாக தகவல்கள் வலம் வந்தன. நடிகை கெளதமியும் கடந்த மூன்று, நான்கு மாதங்களாக ராஜபாளையத்தில் முகாமிட்டு, சில லட்சங்களை செலவழித்துக் கொண்டிருந்தார். ஆனால், கடைசி நேரத்தில் அதிமுக வசமிருந்து பாஜகவுக்கு தொகுதி கைமாறியது. தற்போது ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் அறிவித்துள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜான் பாண்டியன்,  "ராஜபாளையம் தொகுதிக்கான வேட்பாளராக ஓட்டெடுப்பு மூலம் கட்சியின் பொதுச்செயலாளர் பிரிசில்லா ஜான் பாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார். இந்த பிரிசில்லா என்பவர் ஜான் பாண்டியனின் மனைவி. உடனடியாக அவர் ராஜபாளையம் தொகுதிக்குச் சென்று தேர்தல் பணிகளைத் தொடங்கி விட்டார்.  இந்தத் தேர்தலில் தமமுக தனிச் சின்னத்தில் போட்டியிடாமல், பாஜகவின் தாமரை சின்னத்திலேயே போட்டியிட முடிவு செய்துள்ளது. 

தனது மனைவிக்காகப் பிரச்சாரம் செய்யப் பிரதமர் நரேந்திர மோடியை ராஜபாளையம் அழைக்கவும் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.