விஜய் 2 தொகுதிகளில் போட்டியிடுவது இதனால் தானா? - அரசியலில் குதிக்கும் த்ரிஷா? தவெக-வில் முக்கியப் பதவி?!
தென்னிந்தியத் திரையுலகின் 'எவர்கிரீன்' நாயகியாக வலம் வரும் த்ரிஷா, விரைவில் தனது திரைப் பயணத்தை முடித்துக் கொண்டு தீவிர அரசியலில் குதிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் தயாரிப்பாளர் கல்பதி அகோரம் வீட்டுத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் விஜயும், த்ரிஷாவும் ஒரே காரில் வந்து இறங்கியது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. ஏற்கனவே விஜய் - சங்கீதா விவாகரத்து குறித்த வதந்திகள் பரவி வரும் சூழலில், இந்தச் சந்திப்பு பல்வேறு யூகங்களுக்கு இடமளித்தது.
தவெக தலைவர் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், தேர்தல் முடிவுகளைப் பொறுத்து அதில் ஒரு தொகுதியை த்ரிஷாவுக்கு விட்டுக்கொடுக்கலாம் என்று திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது. தேர்தல் முடிவுகளைப் பொறுத்து விரைவில் தவெக-வின் கொள்கைப் பரப்புச் செயலாளர் அல்லது மகளிர் அணிப் பிரிவில் த்ரிஷாவுக்கு முக்கியப் பொறுப்பு வழங்கப்படலாம் என தவெக வட்டாரங்களிலேயே கசிந்து வருகிறது.
த்ரிஷா தற்போது கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு, புதிய படங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்படுவதைத் தவிர்த்து வருவதாகக் கூறப்படுகிறது. 'ஜனநாயகன்' படத்திற்குப் பிறகு விஜய் அரசியலில் முழுமையாக ஈடுபடவுள்ளதைப் போலவே, த்ரிஷாவும் தனது 20 ஆண்டுகால சினிமா வாழ்க்கைக்கு விடை கொடுத்துவிட்டுத் 'தவெக' கட்சியின் நட்சத்திரப் பேச்சாளராக மாற வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது. இருப்பினும், இது குறித்து த்ரிஷா தரப்பிலிருந்தோ அல்லது தமிழக வெற்றிக் கழகத் தரப்பிலிருந்தோ இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.