“திரிஷா உங்களுக்கு சகோதரியா இல்லை துணைவியா?” - அதிமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!

 

தமிழக முதல்வர் விஜய் கலந்து கொள்ளும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நடிகை திரிஷாவை அழைத்துச் செல்வதாகக் கூறி, முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் வெளிப்படையாக எழுப்பியுள்ள கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

பொதுக்கூட்டங்கள் மற்றும் அரசு நிகழ்ச்சிகள் உட்பட எந்தவொரு நிகழ்விற்காக முதல்வர் விஜய் வெளியூர் அல்லது வெளிநாடுகளுக்குச் சென்றாலும், நடிகை திரிஷாவை உடன் அழைத்துச் செல்வது ஏன் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

எந்த உறவின் அடிப்படையில் அவரைத் தொடர்ந்து உடன் அழைத்துச் செல்கிறார் என்று கேள்வி எழுப்பிய அவர், அது உடன் பிறவா சகோதரியா அல்லது மனைவியா துணைவியா என்பதை முதல்வர் பகிரங்கமாகத் தெளிவுபடுத்த வேண்டும் என ஆவேசமாகத் தெரிவித்தார்.

இது போன்ற செயல்பாடுகள் மாநிலத்தின் நற்பெயரைக் குலைப்பதாகவும், தமிழகத்தைக் கேவலப்படுத்த வேண்டாம் என்றும் அவர் எச்சரிக்கும் வகையில் கருத்துகளை முன்வைத்துள்ளார். இத்தகைய தனிப்பட்ட விமர்சனங்கள் தற்போது அரசியல் களத்தில் கடுமையான விவாதங்களையும் சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளன.