விஜய் பிரதமர் வேட்பாளரா? - அமைச்சர் செங்கோட்டையன் பதில்!

 

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரதமர் வேட்பாளரா என்ற கேள்விக்கு அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் நகைச்சுவையாகவும் தெளிவாகவும் பதிலளித்துள்ளார். செய்தியாளர்களின் இந்தக் கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், என்னைச் சிக்கலில் மாட்டி விடாதீர்கள் என்று சிரித்தபடியே கூறினார்.

முதலமைச்சர் விஜய் மிகத் தெளிவாக இருப்பதாகவும், மக்கள் அவரை முழுமையாக நம்பி வாக்களித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தமிழக மக்களைக் பாதுகாக்கவும், மக்கள் விரும்பும் அனைத்து நலத்திட்டங்களையும் தடையின்றிச் செயல்படுத்தவும் தேவையான அனைத்து முயற்சிகளையும் முதல்வர் விஜய் தீவிரமாக மேற்கொண்டு வருவதாகவும் செங்கோட்டையன் தெரிவித்தார்.