“டிடிவி தினகரனுக்குக் கூச்சமாக இல்லையா?” - அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி!
மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது தொடர்பாக அரசியல் விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், டிடிவி தினகரன் அவருக்கு ஆதரவாகப் பேசுவது ஏன் என்று அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த காலத்தில் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது தொடர்பான விவாதங்கள் அரசியல் வட்டாரத்தில் தொடர்ச்சியாக நீடித்து வருகின்றன.
இந்நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்து வருவது குறித்து அமைச்சர் நிர்மல் குமார் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
“மிசாவில் தான் கைது செய்யப்பட்டார் என ஸ்டாலினுக்கு எதற்காக அவர் வக்காலத்து வாங்குகிறார்? இப்படிச் சொல்வதற்கு அண்ணன் டிடிவி தினகரனுக்கே கூச்சமாக இல்லையா?” என்று அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பியுள்ளார்.