லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்.. குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!

 

தெற்கு லெபனானில் இஸ்ரேலிய ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தெற்கு லெபனானில் உள்ள நபடிஹா மாவட்டத்தில், ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவின் ஆதிக்கம் நிறைந்த குடியிருப்புப் பகுதிகளை இலக்கு வைத்து இஸ்ரேலியப் போர் விமானங்கள் வான்வழித் தாக்குதல் நடத்தின. இந்த திடீர் குண்டுவெடிப்பில் வீடுகள் பலத்த சேதமடைந்தன. இதில் சிக்கி பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பொதுமக்கள் மீதான இந்தத் தாக்குதலுக்கு லெபனான் அதிபர் ஜோசப் அரோன் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். ஹிஸ்புல்லா அமைப்பின் தளவாடங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை மட்டுமே இலக்காகக் கொண்டு துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.