காசா மீது இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல்.. குழந்தைகள் உட்பட 8 பேர் பரிதாப பலி!

 

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரிடையே கடந்த சில மாதங்களாகப் போர் நீடித்து வருகிறது. இந்த கொடூரமான போரில் ஏற்கனவே எழுபத்தி மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் தங்களின் உயிர்களை இழந்துள்ளனர். இந்நிலையில் காசா முனைப் பகுதியை நோக்கி இஸ்ரேல் ராணுவம் நேற்று திடீரென ட்ரோன் மூலம் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்தத் திடீர் தாக்குதலானது கான் யூனிஸ், மத்திய காசா மற்றும் தெற்கு காசா ஆகிய முக்கியப் பகுதிகளைக் குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் வீடுகள் சேதமடைந்ததுடன் இரண்டு குழந்தைகள் உட்பட மொத்தம் எட்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இருபதிற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காசா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

காசாவில் அப்பாவிப் பொதுமக்கள் தங்கியிருந்த பகுதிகளைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆனால் இந்தத் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்துள்ள இஸ்ரேல் ராணுவத் தரப்பு, தங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஹமாஸ் அமைப்பினரை மட்டுமே குறிவைத்து இந்தத் தாக்குதலை நடத்தியதாக அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.