BIG NEWS....  நள்ளிரவில் விண்ணில் பாய்ந்த ஜிஎஸ்எல்வி எஃப்-18... மாஸ் வீடியோ!  

 

 

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, ஜிஎஸ்எல்வி எஃப்-18 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து இன்று (அக். 31) அதிகாலை 12 மணிக்கு முன்பாக, நள்ளிரவு 11.51 மணிக்கு ராக்கெட் ஏவப்பட்டது.

allowfullscreen

இந்த ராக்கெட், இந்தியாவின் வழிகாட்டுதல் சேவையை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட 2,250 கிலோ எடை கொண்ட என்விஎஸ்-03 என்ற நவீன வழிகாட்டுதல் செயற்கைக்கோளைச் சுமந்து சென்றது.

திட்டமிட்டபடி விண்ணில் பயணித்த ராக்கெட், செயற்கைக்கோளை அதன் இலக்கான புவி நீள்வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது. இதனை இஸ்ரோ விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.

வழிகாட்டுதல் சேவைக்கு புதிய வலுசேர்க்கும் செயற்கைக்கோள்

இந்தியாவின் நாவிக் (NavIC) செயற்கைக்கோள் வழிகாட்டுதல் அமைப்பின் சேவைகளை மேம்படுத்துவதில் என்விஎஸ்-03 முக்கியப் பங்கு வகிக்கும். இந்த வெற்றியின் மூலம் இந்தியாவின் விண்வெளித் தொழில்நுட்பத் திறனுக்கு மேலும் ஒரு மைல்கல் கிடைத்துள்ளது.