இன்று அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது இஸ்ரோவின் 'இ.ஓ.எஸ். 5' செயற்கைக்கோள்!

 
இஸ்ரோ ராக்கெட் ஏவுகணை

இன்று அதிகாலை 2.55 மணிக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் 'ஜி.எஸ்.எல்.வி. எப்-17' ராக்கெட் மூலம் பூமி கண்காணிப்புச் செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக சீறிப் பாய்ந்தது. 

'ஜூசாட்-1 ஏ' என்று அழைக்கப்படும் 'இ.ஓ.எஸ். 5' பூமி கண்காணிப்புச் செயற்கைக்கோள், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது ஏவுதளத்திலிருந்து அதிகாலை 2.55 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.

ராக்கெட்டுக்கான எரிபொருள் நிரப்பும் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ள நிலையில், அதற்கான இறுதிக்கட்டப் பணியான கவுன்ட்டவுன் நேற்று முன் தினம் இரவே தொடங்கியது. இஸ்ரோ விஞ்ஞானிகள் ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகளைத் தீவிரமாகக் கண்காணித்து வந்த நிலையில் இன்று அதிகாலை விண்ணில் ஏவப்பட்டது. 

இந்தியாவின் எல்லைப் பகுதிகளைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளுக்குத் தேவையான மிக முக்கியமான தரவுகளை வழங்கக்கூடியது இச்செயற்கைக்கோள் ஆகும். இது புவிசார் சுற்றுப்பாதையில் இருந்து இந்தியாவைக் கண்காணிக்கும் நாட்டின் முதல் இமேஜிங் செயற்கைக்கோள் என்பது குறிப்பிடத்தக்கது.

18 நிமிடங்களுக்குப் பிறகு செயற்கைக்கோள் திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. அதாவது பூமியில் இருந்து சுமார் 36 ஆயிரம் கிலோமீட்டர் உயரத்தில் புவி நிலை சுற்றுவட்டப்பாதையில் 'இ.ஓ.எஸ்.-5' செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்படது. இதனை இஸ்ரோ விஞ்ஞானிகள் உற்சாகமாக கொண்டாடினர். மேலும் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

இந்திய துணைக்கண்டத்தின் மீது நிலைத்திருக்கும் வகையில் செயல்பட உள்ளதால் மல்டி-ஸ்பெக்ட்ரல் மற்றும் ஹைப்பர்-ஸ்பெக்டரல் தொழில்நுட்பம் கொண்ட அதிநவீன கேமராக்கள் மூலம் இந்தியாவின் நிலப்பரப்பை தொடர்ந்து கண்காணித்து நிகழ்காலத்துக்கு நெருக்கமான புகைப்படங்களை வழங்கும் வகையில் இந்த ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் எல்லைப் பகுதிகளை தொடர்ச்சியாக கண்காணித்து, நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளுக்குத் தேவையான முக்கியத் தரவுகளை வழங்கும். இது புவிசார் சுற்றுப்பாதையில் இருந்து இந்தியாவைக் கண்காணிக்கும் நாட்டின் முதல் இமே ஜிங் செயற்கைக்கோள் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.