undefined

ஐடி ஊழியர்  தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை!  

 

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள குமடிபாளையத்தை சேர்ந்த கவீன் (23) என்பவர், சென்னையில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று இரவு பெற்றோருக்கு போன் செய்து, வீட்டிற்கு வருவதாக தெரிவித்தார். அதன்படி, அவர் சென்னையிலிருந்து பழனி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்து, இன்று அதிகாலை 3.45 மணியளவில் மோகனூர் ரயில் நிலையத்தில் இறங்கினார். ஆனால், அதன் பின்னர் அவர் வீட்டிற்கு செல்லவில்லை. இதனால் கவலை அடைந்த பெற்றோர் அவரை தேடத் தொடங்கினர்.

இந்நிலையில், இன்று காலை மோகனூர் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் தண்டவாளத்தில், தலை துண்டான நிலையில் ஒரு இளைஞரின் சடலம் கிடந்தது. தகவல் அறிந்த சேலம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர், சடலமாக மீட்கப்பட்டவர் கவீன் என்பது உறுதி செய்யப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில், மோகனூர் ரயில் நிலையத்தில் இறங்கிய கவீன், பின்னர் அந்த பகுதியில் வந்த ரயிலின் முன் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரியவந்தது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!