“திமுகவுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் தான்..” - வானதி சீனிவாசன் விமர்சனம்!

 

திமுகவின் ஆதரவுடனும் தொண்டர்களின் உழைப்பிலும் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியினர்தான் திமுகவுக்குத் துரோகம் செய்துவிட்டதாகப் பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

திமுக வழங்கிய ஆதரவு மற்றும் திமுக தொண்டர்களின் உழைப்பின் மூலம் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியினரே இப்போது திமுகவுக்குத் துரோகம் இழைத்து விட்டதாக வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். தென் மாநிலங்களின் தொகுதிகள் குறையக் கூடாது என்ற நிபந்தனையுடன் திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவிற்கும், பெண்களின் உரிய பிரதிநிதித்துவத்திற்கும் ஆதரவு தெரிவித்துள்ள திமுகவுக்கு வானதி சீனிவாசன் நன்றி தெரிவித்துள்ளார்.

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழகம் எந்த வகையிலும் வஞ்சிக்கப்படவில்லை என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.