"திமுகவின் ‘பழைய மாணவர்களை’ பெயில் ஆக்கியவர் விஜய்" - தவெக எம்.எல்.ஏ. சுதாகர் பேச்சு:
Aug 19, 2026, 16:00 IST
சட்டப்பேரவை விவாதத்தின் போது பேசிய காட்பாடி தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எம். சுதாகர், நடிகர் ரஜினிகாந்தின் பழைய பேச்சு மற்றும் காட்பாடி தொகுதி தேர்தல் முடிவு குறித்துக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.
திமுகவில் பல ‘பழைய மாணவர்கள்’ இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் முன்பு கூறியதைச் சுட்டிக்காட்டிய அவர், அப்படிப்பட்ட பழைய மாணவர்களைத் தேர்தலில் தோல்வியடையச் செய்து, அந்த வகுப்பறை ஆசிரியரையும் வெளியே அனுப்பியவர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் எனத் தெரிவித்தார்.
காட்பாடி தொகுதியில் தொடர்ந்து 10 முறை வெற்றி பெற்ற மூத்த அரசியல்வாதியான துரைமுருகனின் வெற்றப் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து, அவருக்கு ஓய்வு கொடுத்து விட்டுத் தவெக தலைவர் விஜய் காட்பாடியைச் சிறந்த தொகுதியாக மாற்றியுள்ளார் என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.