‘வாழ்வது சாத்தியமே இல்லை..” இன்ஸ்டா ரீல்ஸ் வெளியிட்டு அக்கா - தங்கை உயிரிழப்பு... தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு!

 

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் 17 மற்றும் 15 வயதுடைய இரு சகோதரிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் காணொளிகளை உருவாக்கி வந்த இருவரும் உயிரிழப்பதற்கு முன்பு சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்த வாசகம் வைரலாகி வருகிறது. 

allowfullscreen

காலை நடைப்பயிற்சிக்குச் செல்வதாகக் கூறிவிட்டு இருவரும் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளனர். நீண்ட நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் தேடியுள்ளனர். அப்போது இருவரும் மரத்தில் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, உயிரிழப்பதற்கு முன்பு இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸில், “வாழ்வது சாத்தியமே இல்லை, பிறகு இறப்பது தானே வழி?” என்ற பொருளில் இருவரும் பதிவிட்டிருந்துள்ளனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இரு சிறுமிகளும் உயிரிழந்ததற்கான காரணம் என்ன, அவர்களின் சமூக வலைதளப் பதிவுக்கும் சம்பவத்திற்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.