“தற்கொலை அல்ல... கொலை தான்...” - நடிகர் சுஷாந்த் சிங் சகோதரி பரபரப்பு குற்றச்சாட்டு!
2020-ஆம் ஆண்டு மர்மமான முறையில் இறந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் குறித்து, அவரது சகோதரி ஸ்வேதா சிங் புதிய குற்றச்சாட்டை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் தற்கொலை அல்ல, கொலை என்று ஸ்வேதா சிங் வலியுறுத்தியுள்ளார். “உளவியல் நிபுணர்கள் இருவர் தாமாகவே எனக்கு கூறியுள்ளனர் – சுஷாந்த் தற்கொலை செய்ய முடியாது. மின்விசிறி மற்றும் தரை இடையிலான தூரம் அதிகமாக இருந்தது; ஒருவர் தற்கொலை செய்ய நாற்காலி அல்லது பொருத்தமான தளம் தேவை. ஆனால் அந்த அறையில் நாற்காலியே இல்லை” என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த 2020 ஜூன் 14 அன்று மும்பையின் பந்த்ரா பகுதியில் உள்ள அவரது வீட்டில் சுஷாந்த் சிங் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார். அப்போது அவரது மரணம் குறித்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து, வழக்கு மத்திய புலனாய்வுத்துறை (சிபிஐ)க்கு மாற்றப்பட்டது.
நான்கு ஆண்டுகளாக நீடித்த இந்த விசாரணைக்கு பின்னர், “சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் தற்கொலை தான். இதில் நடிகை ரியா சக்ரவர்த்திக்கு எந்த தொடர்பும் இல்லை” என்று சிபிஐ அறிக்கை வெளியிட்டது. இதனால் வழக்கு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில், சிபிஐ அறிக்கையை சுஷாந்தின் குடும்பத்தினர் ஏற்க மறுத்துள்ளனர். அவரது தந்தை கே.கே. சிங், “இந்த அறிக்கை நியாயமற்றது. நாங்கள் நீதிமன்றத்தில் போராடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.
சுஷாந்தின் சகோதரியின் புதிய குற்றச்சாட்டு வழக்கில் மீண்டும் மர்மத்தை கிளப்பியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் “சுஷாந்துக்கு உண்மையான நீதி கிடைக்குமா?” என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!