“கோடி கோடியா பணத்தோடு வந்தாங்க, அமைச்சர் பதவி தர்றோம்னாங்க” - ஐயூஎம்எல் எம்எல்ஏ சையத் பரூக் பரபரப்பு!
திருவண்ணாமலையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பேசிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்றக் கட்சித் தலைவர் சையத் பரூக் வெளியிட்ட பகிரங்கத் தகவல்கள் அரசியல் வட்டட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
தேர்தல் முடிந்த பிறகு தங்களைத் தேடி இரண்டு பெட்டிகளில் கோடி கோடியாகப் பணம் கொண்டு வந்ததாகவும், உள்ளாட்சித் துறை அல்லது போக்குவரத்துத் துறை போன்ற தங்களுக்கு விருப்பமான எந்த அமைச்சர் பதவி வேண்டும் என்று கேட்டு கையெழுத்திடச் சொன்னதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், தான் கோடிகளுக்குச் சாய்ந்தவர்கள் அல்ல, கொள்கை சார்ந்தவர்கள் என்று கூறி அந்தப் பணத்தையும் பதவியையும் தாங்கள் நிராகரித்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.
திமுகவும் அதிமுகவும் இணைந்து எடப்பாடியை ஆட்சியில் அமர வைப்பதாக மு.க. ஸ்டாலின் கூறியதால்தான் தாங்கள் கூட்டணியில் இருந்து வெளியே வந்ததாகவும் சையத் பரூக் அந்தப் பொதுக்கூட்டத்தில் விளக்கமளித்துள்ளார். தற்போது இவர் பேசியுள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.