இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்... வார்த்தைகளில் நிதானத்தை மட்டும் கைவிடாதீங்க!
மேஷம்: இன்று உங்களுக்கு வேகத்தில் காரியங்கள் கைகூடும் நாளாக அமையும். நீண்ட நாட்களாகத் தள்ளிப்போன அரசு சார்ந்த உதவிகள் மற்றும் சொத்து விவகாரங்கள் சாதகமாக முடியும். புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. கூட்டாளிகளுடன் சிறு சலசலப்புகள் தோன்றினாலும் பெரிய பாதிப்பு இருக்காது. கணவன்-மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் கல்வி விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.
ரிஷபம்: மனதில் தெளிவும், செயல்களில் வேகமும் நிறைந்திருக்கும் நாள். உங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவோடு புதிய பொறுப்புகளைச் செவ்வனே செய்து முடிப்பீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி பெருகும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
மிதுனம்: திடீர் வரவுகளும், செலவுகளும் சமமாக இருக்கும் நாள். எதிலும் நிதானத்துடன் செயல்படுவது தேவையற்ற அலைச்சல்களைத் தவிர்க்க உதவும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகத்தால் வியாபாரத்தில் வளர்ச்சி காண்பீர்கள். பணியிடத்தில் அதிகாரிகளிடம் பேசும்போது கவனம் தேவை. குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. கணவன்-மனைவிக்குள் இருந்த பனிப்போர் நீங்கும்.
கடகம்: இன்று உங்களுக்குப் புதிய நம்பிக்கைகள் பிறக்கும் நாளாக அமையும். எதையும் திட்டமிட்டுச் செய்வதன் மூலம் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் அல்லது பதவி உயர்வுக்கான அறிகுறிகள் தென்படும். தாயாரின் உடல்நலத்தில் தனி கவனம் செலுத்த வேண்டும். சுபகாரியப் பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவை நோக்கி நகரும்.
சிம்மம்: உங்களது ஆளுமைத் திறனும், நிர்வாகத் திறமையும் பளிச்சிடும் நாள். சமூகத்தில் உங்களுக்கான மதிப்பும் மரியாதையும் வேகத்தில் உயரும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். தந்த வழியில் எதிர்பார்த்த உதவிகள் தடையின்றிக் கிடைக்கும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு மனதிற்கு பலம் தரும்.
கன்னி: சவாலான காரியங்களையும் உங்களது மதிநுட்பத்தால் எளிதில் கையாண்டு வெற்றி பெறுவீர்கள். ஆன்மீகப் பயணங்களுக்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் உங்களது உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் மூலம் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். சகோதர வழியில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும்.
துலாம்: இன்று நீங்கள் எதிலும் அவசரப்படாமல் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது மன அமைதிக்கு வழிவகுக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் நெருக்கடிகளுக்கு ஆளாக நேரிடலாம். பணப் பரிவர்த்தனைகளில் கூடுதல் விழிப்புணர்வு தேவை. வாழ்க்கைத்துணையுடன் சிறு கருத்து வேறுபாடுகள் வரக்கூடும் என்பதால் பேச்சில் நிதானம் அவசியம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
விருச்சிகம்: தொட்டதெல்லாம் துலங்கும் நற்பலன்கள் நிறைந்த நாள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த நீதிமன்ற வழக்குகள் உங்களுக்குச் சாதகமாக முடியும். சந்தையில் உங்களது தயாரிப்புகளுக்கு வரவேற்பு இருக்கும். புதிய தொழில் கூட்டாளிகள் இணைவார்கள். திருமண வயதில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமையும். கணவன்-மனைவி இடையே காதல் மற்றும் பிணைப்பு அதிகரிக்கும்.
தனுசு: பகைவர்களின் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி காண்பீர்கள். கடன் தொல்லைகளில் இருந்து ஓரளவுக்கு விடுபட புதிய வழிகள் பிறக்கும். உத்தியோகத்தில் உங்களது ஆலோசனைகள் ஏற்றுக்கொள்ளப்படும். வியாபாரத்தில் நிலுவையில் இருந்த பழைய பாக்கிகள் வசூலாகும். உங்களது உழைப்பிற்கு குடும்பத்தினர் பக்கபலமாக இருப்பார்கள். பிள்ளைகளால் பெருமை தேடி வரும்.
மகரம்: புதிய திட்டங்களைத் தீட்டுவதற்கும், எதிர்கால முதலீடுகளுக்கும் ஏற்ற சிறப்பான நாள். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் தேடி வரும். புதிய தொழிலைத் தொடங்குவதற்கான முயற்சிகள் கைகூடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பூர்வீகச் சொத்து விவகாரங்களில் இருந்த தடைகள் நீங்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாகப் பொழுதுபோக்குவீர்கள்.
கும்பம்: இன்று உங்களது பேச்சிலும் செயலிலும் தனி கம்பீரம் இருக்கும். உங்களது நீண்ட நாள் கனவுகள் நனவாகத் தொடங்கங்கும் திருப்புமுனை நாள். தகவல் தொழில்நுட்பத் துறையினருக்குப் புதிய வேலைவாய்ப்புகள் தேடி வரும். வியாபாரத்தில் லாபத்தைக் காண்பீர்கள். வாகன மற்றும் வீட்டுச் சேர்க்கைக்கான யோகம் உண்டு. உறவினர்களுடனான உறவு முன்பை விட வேகத்தில் மேம்படும்.
மீனம்: உங்களது விடாமுயற்சிக்கு பலன் கிடைக்கும் நாள். தைரியமும், தன்னம்பிக்கையும் உங்களது செயல்பாடுகளில் வெளிப்படும். குறுகிய தூரப் பயணங்களால் வியாபாரத்தில் புதிய ஆர்டர்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் நிர்வாகத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு இருக்கும். அண்டை வீட்டாருடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். குடும்ப ஒற்றுமை பலம் பெறும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும்.