பட்ஜெட்டில் நெசவாளர்களுக்கு ஜாக்பாட் - ஜவுளித் துறைக்கு 'தேசிய நார் திட்டம்'
Updated: Feb 1, 2026, 12:26 IST
அதிக வேலைவாய்ப்புகளை வழங்கும் ஜவுளித் துறையை (Textile Sector) நவீனப்படுத்த 'தேசிய நார் திட்டம்' (National Fibre Scheme) என்ற புதிய ஒருங்கிணைந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டு, கம்பளி, சணல் போன்ற இயற்கை நார்கள் மற்றும் புதிய காலத்திற்குத் தேவையான செயற்கை நார்களை (Man-made fibres) உற்பத்தி செய்வதில் இந்தியா தற்சார்பு அடைய இது உதவும்.
குறிப்பாகத் தமிழகத்தின் திருப்பூர், ஈரோடு போன்ற ஜவுளி மையங்கள் இந்தத் திட்டத்தினால் பெரிதும் பயனடையும். நெசவாளர்களுக்குத் தேவையான மூலப்பொருட்கள் தங்குதடையின்றி கிடைப்பதையும், ஏற்றுமதி சந்தையில் இந்தியத் துணிகளின் தரத்தை உயர்த்துவதையும் இந்தத் திட்டம் உறுதி செய்யும். மேலும், 7 புதிய 'மெகா ஜவுளிப் பூங்காக்கள்' (MITRA Parks) அமைக்கும் பணியும் இந்த நிதியாண்டில் வேகம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.