undefined

ஜாக்பாட்.. அரசு ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் குவியப்போகும் அரியர் தொகை!

 

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது ஊதியக் குழுவால் லட்சக்கணக்கில் அரியர் தொகை குவியப்போவதாக தகவல்கள் வெளியாகி குஷிப்படுத்தியிருக்கிறது. 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், 2026-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் 8-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட உள்ளன. 8-வது ஊதியக் குழுவிற்கான தலைவர் மற்றும் உறுப்பினர்களை மத்திய அரசு ஏற்கனவே நியமித்துள்ளது. இக்குழு தனது பரிந்துரைகளை வழங்க 18 மாத கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

வழக்கமான நடைமுறைப்படி, இந்த ஊதியக் குழுவின் புதிய சம்பள விகிதங்கள் 2026 ஜனவரி 1 முதல் முன் தேதியிட்டு அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் முழுமையான அமலாக்கம் 2027-ம் ஆண்டின் பிற்பகுதியில் அல்லது 2028-ம் ஆண்டு தொடக்கத்தில் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஊதியக் குழு 2026 ஜனவரி முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டால், அதுவரை ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட பழைய சம்பளத்திற்கும் புதிய பரிந்துரைக்கப்பட்ட சம்பளத்திற்கும் இடையிலான வித்தியாசம் 'அரியர்' தொகையாக வழங்கப்படும். இது பல ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 8-வது ஊதியக் குழுவின் கீழ் ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் மற்றும் படிகளில் 20% முதல் 35% வரை உயர்வு இருக்கக்கூடும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இந்த ஊதியக் குழு மாற்றத்தினால் சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 69 லட்சம் ஓய்வூதியதாரர்களும் நேரடியாகப் பலன் அடைவார்கள். பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வுக்கு ஏற்றவாறு ஊதியக் கட்டமைப்பை மாற்றியமைப்பதே இந்த 8-வது ஊதியக் குழுவின் முக்கிய நோக்கமாகும்.

தற்போது பட்ஜெட் மற்றும் நாடாளுமன்றக் கூட்டத்தொடர்களில் இது குறித்த விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதால், ஊழியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.