என் அம்மா தான் என் வாழ்க்கையின் மிகப்பெரிய தூண்... ஜேசன் சஞ்சய் நெகிழ்ச்சி!
Aug 22, 2026, 09:34 IST
தமிழக முதல்வரும், தளபதி நடிகருமான விஜய்யின் மகனும், இயக்குநருமான ஜேசன் சஞ்சய் அளித்த நேர்காணல் ஒன்றில் தனது தாயார் குறித்து உருக்கமாகப் பகிர்ந்துள்ளார்.அவர் பேசுகையில், தனது வாழ்க்கையின் மிகப்பெரிய தூண் தனது தாயார் என்றும், அவர் 24 மணி நேரமும் தன்னைப் பற்றியும் தனது தங்கையைப் பற்றியும் மட்டுமே சிந்தித்துக் கொண்டிருப்பார் என்றும் குறிப்பிட்டுள்ளார்
தனது வாழ்க்கையில் தனது தாயார் அளித்து வரும் தொடர் ஆதரவும் அக்கறையும் குறித்தும் அவர் வெளிப்படையாகப் பேசியுள்ளார் . ஜேசன் சஞ்சய் தனது குடும்பத்தினரைப் பற்றிப் பகிர்ந்துள்ள இந்த நெகிழ்ச்சியான கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் பெரிதும் கவனம் பெற்று வருகின்றன