ஜெம் வீரமணி பாலியல் வழக்கு... தவெக அமைச்சர்கள் மீது வழக்கு தொடர உயர்நீதிமன்றம் அனுமதி!

 

ஜெம் வீரமணி வழக்கை முந்தைய திமுக அரசு மூடி மறைத்ததாக அமைச்சர்கள் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா மற்றும் தவெக தகவல் தொழில்நுட்பப் பிரிவு குற்றம்சாட்டியிருந்த நிலையில், அதற்கு எதிராக வழக்கு தொடரத் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஜெம் வீரமணி வழக்கை திமுக அரசு மூடி மறைத்ததாக அமைச்சர்கள் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா மற்றும் தவெக ஐடி விங் தரப்பில் பகிரங்கக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இந்த அவதூறு குற்றச்சாட்டுகளுக்கு எதிராக, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தரப்பில் ரூ.1.01 கோடி மானநஷ்ட ஈடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அமைச்சர்கள் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா மற்றும் தவெக தகவல் தொழில்நுட்பப் பிரிவினருக்கு எதிராக மானநஷ்ட வழக்கு தொடர அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.