இனி கிராமுக்கு ரூ10000/- நகைக்கடன் .... கூட்டுறவு வங்கிகளில் உச்சவரம்பு அதிகரிப்பு...?!
Aug 30, 2026, 06:54 IST
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் தற்போது ஒரு கிராம் தங்கத்திற்கு அதிகபட்சமாக 9,000 ரூபாய் வரை நகைக்கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஒரு கிராம் தங்கத்திற்கு அதிகபட்சமாக 10,000 ரூபாய் வரை நகைக்கடன் வழங்கக் கூட்டுறவுத் துறை திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்புதல் பெறப்பட்டவுடன் இந்த புதிய திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகத் கூட்டுறவு வங்கிகளை நாடும் பயனாளிகளுக்குக் கூடுதல் கடன் தொகை கிடைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.