நகைக்கடை உரிமையாளரை நடுரோட்டில் இழுத்துப்போட்டு தாக்கிய கும்பல்.. தென்காசியில் பரபரப்பு!
தென்காசி மாவட்டத்தில் நகைக்கடை உரிமையாளர் ஒருவர் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளார்.
தென்காசியில் அம்மன் சன்னதி பஜார் பகுதியில் நகைக்கடை நடத்தி வரும் ஹர்ஷத் என்பவர், காலிப் என்ற நபரிடமிருந்து ஒரு நகையை வாங்கும் படியாக ரூ.3.5 லட்சம் பணம் கொடுத்து இருந்தார். காலிப் அந்த நகையின் தரம் குறைவாக உள்ளதாக கூறியபோது, அதை மாற்றி தருமாறு ஹர்ஷத் கோரினார். ஆனால், பணத்தை திருப்பி தரவில்லை எனவும் வர்த்தகத்தில் ஏமாற்றியதாகவும் ஹர்ஷத் தெரிவித்துள்ளார்.
இரவு நேரத்தில் இதற்காக அழைக்கப்பட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, காலிப் மற்றும் அவரது சகோதரர்கள் உட்பட சிலர் ஹர்ஷத்தை கடுமையாக தாக்கினார். இந்த முழு சம்பவம் சிசிடிவி காட்சிகளில் பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பரவியுள்ளது.
இதன் பின் தென்காசி போலீசார் சம்பவத்தை குற்றவியல் வழக்காக பதிவு செய்து விசாரணை துவக்கியுள்ளனர். தாக்குதலில் தொடர்புடைய காலிப், அஸ்லம், ஹாஜி ஆகியோர் உட்பட நான்கு சந்தேக நபர்களை போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.