உஷார்.. ஓடும் பேருந்தில் நகை பறிப்பு... 2 பெண்கள் கைது!
ஓடும் அரசு பேருந்தில் மூதாட்டியிடம் நகை பறித்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 2 பெண்களை பொதுமக்கள் துரத்தி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே காஞ்சிரங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜாமணி. அவரது மனைவி சேசம்மாள் (75) கடந்த திங்களன்று நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்துவிட்டு கொல்லங்கோடு திரும்புவதற்காக அரசு பேருந்தில் பயணம் செய்தார்.
பேருந்தில் அதிகமான கூட்டம் இருந்ததால் அவர் நடுவே நின்றுக் கொண்டிருந்தார். பேருந்து வில்லுக்குறி பாலம் அருகே சென்றபோது, கழுத்தில் இருந்த 2½ பவுன் தங்கச் சங்கிலி மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே பேருந்து நிறுத்தப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டது.அந்த நேரத்தில், 2 பெண்கள் பேருந்தில் இருந்து தப்பிச் செல்ல முயன்றனர். இது கவனித்த பயணிகள் அவர்களை மடக்கி பிடித்து சோதனை செய்ததில், சேசம்மாளின் மாயமான சங்கிலி அவர்களிடம் இருந்து மீட்கப்பட்டது.
பொதுமக்கள் இருவரையும் இரணியல் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி அண்ணா நகரைச் சேர்ந்த பவானி (29), மீனாட்சி (29) என தெரியவந்தது. இவர்களுக்கு குமரி மாவட்டத்தில் இதேபோன்ற நகை பறிப்பு வழக்குகள் ஏற்கனவே உள்ளன என்றும் போலீசார் தெரிவித்தனர்.இருவரும் கைது செய்யப்பட்டு இரணியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் தக்கலை சிறையில் அடைக்கப்பட்டனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!