undefined

போக்குவரத்து கழக அதிகாரியிடம்  நகைப் பறிப்பு... பட்டப்பகலில் துணிச்சல்!  

 

விழுப்புரம் மாவட்டத்தில் நாள் திடீரென பரபரப்பை ஏற்படுத்திய நகை பறிப்பு சம்பவம் நேற்று காலை நிகழ்ந்தது. சாலாமேடு பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் ராமநாதனின் மனைவி அமுதா (58) காய்கறி வாங்கி வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது முகமூடி அணிந்த இரு மர்ம நபர்கள் பைக்கில் வந்து, கண் இமைக்கும் நேரத்தில் அமுதாவின் கழுத்தில் இருந்த 5 பவுன் தாலி சங்கிலியை பறித்துச் சென்றனர். அதிர்ச்சியடைந்த அமுதா “திருடன், திருடன்” என்று கூச்சலிட்டார். அப்பகுதி மக்கள் ஓடி வந்தாலும், பைக்கில் வந்த திருடர்கள் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.

சம்பவத்தின் பின்னர், ரூ.4½ லட்சம் மதிப்புள்ள நகை பறிக்கப்பட்டதாக அமுதா அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நகை பறித்த மர்ம நபர்களை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!