ஜார்க்கண்ட் அமைச்சர்  மாரடைப்பால் காலமானார்... அரசியல் தலைவர்கள் இரங்கல்!

 

 

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் மூத்த தலைவரும், மாநில உயர்கல்வி, தொழில்நுட்பக் கல்வி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சருமான சுதிவ்யா குமார்   நள்ளிரவில் மாரடைப்பால் காலமானார். கிரிதிஹ் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான இவர், சுற்றுலா மற்றும் விளையாட்டுத் துறைகளையும் கவனித்து வந்தார்.

அவரது திடீர் மறைவு கட்சி, அரசு மற்றும் மாநிலத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று ஜேஎம்எம் தெரிவித்துள்ளது. மாநில அமைச்சரின் மறைவுச் செய்தி அப்பகுதி மக்களையும் அரசியல் தலைவர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மறைந்த அமைச்சரின் உடலுக்குப் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது இறுதிச் சடங்குகள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.