கைதிகளுக்கு சிறைக்கு வெளியே சென்று வேலைப் பார்த்துவிட்டு திரும்ப அனுமதி - ஜார்க்கண்ட் அரசு!
Aug 31, 2026, 15:16 IST
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிறைச் சீர்திருத்தங்களை மேம்படுத்தும் வகையில், கைதிகள் பகல் நேரத்தில் சிறைக்கு வெளியே சென்று வேலை பார்த்துவிட்டு, மீண்டும் மாலையில் சிறைக்குத் திரும்பும் புதிய திட்டத்திற்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
கைதிகளிடையே சீர்திருத்தங்களை வலுப்படுத்துவதுடன், அவர்கள் தங்களது தண்டனைக்காலம் முடிந்த பிறகு சமூகத்துடன் எவ்விதத் தயக்கமும் இன்றி எளிதாக இணைவதை உறுதி செய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இத்திட்டத்தின் கீழ், காலை 6 அல்லது 7 மணி அளவில் வேலைக்குச் செல்லும் கைதிகள், அன்றைய வேலை முடிந்ததும் மாலை 6 முதல் 7 மணிக்குள் மீண்டும் சிறை வளாகத்திற்குத் திரும்ப வேண்டும் என்று விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.