சாலை  விபத்தில் வேடிக்கை பார்த்தவர்கள்  மீது லாரி மோதி  7 பேர் பலி... பகீர் வீடியோ!

 

 

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஸ்கூட்டி விபத்தைப் பார்க்கக் கூடியிருந்த பொதுமக்கள் மீது லாரி மோதியதில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜார்க்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டம், கர்ரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கர்ரா–தோர்பா பிரதான சாலையில் வியாழக்கிழமை இரவு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அப்பகுதியில் ஸ்கூட்டி ஓட்டிச் சென்றவர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. அவருக்கு உதவுவதற்காக அருகில் வசித்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்டோர் அங்கு கூடியிருந்தனர்.

allowfullscreen

அப்போது தோர்பா பகுதியில் இருந்து அதிவேகமாக வந்த 18 சக்கரங்கள் கொண்ட கனரக லாரி, சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது மோதியது. இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த மற்றொருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்தை ஏற்படுத்திய லாரியின் ஓட்டுநரும் உதவியாளரும் அங்கிருந்து தப்பிச் சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவர்களில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவர்