ஜியோவின் 10-ம் ஆண்டு நிறைவு... பயனர்களுக்கு அமேசான் பிரைம் சேவை இலவசம் என அறிவிப்பு!
ஜியோ நிறுவனம் தனது 10-ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக, தனது ஜியோ ஹோம் பயனர்களுக்கு அமேசான் பிரைம் லைட் சேவையை முற்றிலும் இலவசமாக வழங்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
ஜியோ நிறுவனம் தனது பத்தாம் ஆண்டு தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் இந்தச் சிறப்புச் சலுகையை அறிவித்துள்ளது. இதன் மூலம் ஜியோ ஹோம் சந்தாதாரர்கள் கூடுதல் கட்டணமின்றி அமேசான் பிரைம் லைட் சேவையின் பலன்களைப் பெற முடியும்.
இந்தச் சிறப்புச் சலுகையானது ஜியோ ஹோம் தளத்தில் உள்ள புதிய மற்றும் பழைய வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் பாரபட்சமின்றிப் படிப்படியாக வழங்கப்படும் என்று அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
எந்தவித கூடுதல் கட்டணமும் இன்றி அமேசான் பிரைம் லைட் சேவையின் சலுகைகள் கிடைக்கவுள்ளதால், ஜியோ ஹோம் சந்தாதாரர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.