ஜோ பைடனுக்கு தீவிரமான புற்றுநோய் பாதிப்பு...அதிர்ச்சி!

 

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு விதைப்பையில் ஏற்பட்ட புற்றுநோய் பாதிப்பு காரணமாக அவர் பதவியில் இருந்தபோதே முறையான சிகிச்சைகளை எடுத்து வந்துள்ளார். அப்போது துணை ஜனாதிபதியாக இருந்த கமலா ஹாரீஸ் அவருடைய சில முக்கியப் பணிகளைக் கவனித்து வந்த நிலையில், ஜனாதிபதி தேர்தலில் அவர் டிரம்பிடம் தோல்வியைத் தழுவினார். தனது பதவிக்காலம் முடிந்த பிறகு கடந்த மே மாதத்தில் தனக்கு தீவிரமான புற்றுநோய் பாதிப்பு இருப்பதை அவர் பகிரங்கமாக அறிவித்தார்.

இந்த நிலையில் அவருக்கு நோயின் பாதிப்பு மேலும் தீவிரம் அடைந்துள்ளதை அவருடைய மகன் ஹன்டர் பைடன் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி உள்ளார். தனது தந்தையின் இந்த கவலைக்கிடமான உடல்நிலையைக் காண்பது தங்களுக்கு மிகுந்த மனவருத்தத்தை அளிப்பதாக அவர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். உலக நாடுகளின் தலைவராகப் பணியாற்றிய ஒருவரின் இந்த மோசமான நிலை அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்தச் செய்தி உலகெங்கிலும் உள்ள அவரது ஆதரவாளர்களையும் அரசியல் தலைவர்களையும் கவலை கொள்ளச் செய்துள்ளது. தீவிர சிகிச்சையில் உள்ள அவர் பூரண நலம் பெற்று மீண்டு வர வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் தங்களது பிரார்த்தனைகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.