89,955 தங்க மோதிரங்களை முதற்கட்டமாக வழங்கியது ஜோய் ஆலுக்காஸ் - நாளை 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டம் தொடக்கம்!

 

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் தமிழக அரசின் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 89,955 தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழக அரசின் இத்திட்டத்திற்காக ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் முதற்கட்டமாக 89,955 தங்க மோதிரங்களைியுள்ளது. இத்திட்டத்தின் மொத்த விநியோகத்தின் கீழ் மொத்தம் 4,41,667 மோதிரங்கள் வழங்கப்படவுள்ளன.

இந்தத் தங்க மோதிரங்கள் அனைத்தும் 22 கேரட் தரம் வாய்ந்தவை ஆகும். மேலும், பி.ஐ.எஸ். ஹால்மார்க் மற்றும் எச்.யூ.ஐ.டி. முத்திரைகளுடன் தரமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளன.

தயாரிக்கப்பட்ட இந்த மோதிரங்கள் அனைத்தும் பிரசவங்கள் அதிகம் நடைபெறும் தமிழகத்தின் முக்கிய 107 அரசு மருத்துவ மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.