நீதிபதியின் 17 வயது மகன் ஓட்டிய சொகுசு கார் மோதி வியாபாரி பலி!

 

கேரளாவில் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியின் 17 வயது மகன் அதிவேகமாக ஓட்டிச் சென்ற சொகுசு கார் மோதியதில், ஸ்கூட்டரில் சென்ற வியாபாரி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் மஞ்செயில் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபாலகிருஷ்ணன் (55). வியாபாரியான இவர் இன்று அதிகாலை சேரநல்லூர் அருகே தனது ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்தச் சாலையில் மிக அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று எதிர்பாராத விதமாக ஜெயபாலகிருஷ்ணனின் ஸ்கூட்டர் மீது பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து குறித்துத் தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய சிறுவனைக் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், அந்த 17 வயது சிறுவன் மாவட்ட நீதிபதியின் மகன் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அந்தச் சிறுவனைச் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். மேலும், ஓட்டுநர் உரிமம் இல்லாத சிறுவனிடம் காரைக் கொடுத்தது தொடர்பாகவும் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.