#JUST IN: அதிமுக 3ம் கட்டப் பட்டியல் வெளியீடு - ஸ்டாலின், உதயநிதிக்கு எதிராக 'பலமான' வேட்பாளர்கள் - 17 தொகுதிகளின் முழு விபரம்!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலையில் 17 தொகுதிகளுக்கான 3-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். இதில் சென்னை மாநகரின் பெரும்பாலான தொகுதிகளுக்கு நட்சத்திர வேட்பாளர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மண்டலத்தில் திமுகவின் கோட்டைகளாகக் கருதப்படும் தொகுதிகளில் அதிமுக தனது மூத்த நிர்வாகிகளைக் களம் இறக்கியுள்ளது: கொளத்தூரில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை எதிர்த்து சந்தான கிருஷ்ணன் போட்டியிடுகிறார். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை எதிர்த்துப் பழம்பெரும் நிர்வாகி ஆதிராஜாராம் களம் காணுகிறார்.’’
ஆயிரம் விளக்கு தொகுதியில் முன்னாள் அமைச்சர் வளர்மதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அண்ணாநகர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் ஆர்.எஸ். ராஜேஷ், விருகம்பாக்கம் தொகுதியில் விருகை வி.என். ரவி, தியாகராயநகர் தொகுதியில் பி. சத்யநாராயணன், வேளச்சேரி தொகுதியில் எம்.கே. அசோக், சோழிங்கநல்லூர் தொகுதியில் கே.பி. கந்தன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
மாவட்ட வாரியாக ராயபுரம் தொகுதியில் ராயபுரம் மனோ, வில்லிவாக்கம் தொகுதியில் விஜயகுமார், ஆலந்தூர் தொகுதியில் சரவணன், திரு.வி.க.நகர் தொகுதியில் பொற்கொடி, எழும்பூர் தொகுதியில் அபிஷேக் ரங்கசாமி, திருச்சுழி தொகுதியில் ராஜவர்மன், ஆலங்குடி தொகுதியில் தன. விமல், திட்டக்குடி தொகுதியில் முருகுமாறன்.
இந்த 3-ஆம் கட்டப் பட்டியலில் சென்னை மாநகரின் முக்கியத் தொகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, திமுகவின் முக்கியத் தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் அதிமுகவின் அனுபவம் வாய்ந்த முகங்களை நிறுத்தியதன் மூலம், தலைநகரில் திமுகவுக்குக் கடும் நெருக்கடி கொடுக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.