JUST IN: அமெரிக்க குடிமக்கள் உடனடியாக வெளியேறத் தூதரகங்கள் அவசர எச்சரிக்கை - மேற்கு ஆசியாவில் மோதல் தீவிரம்!

 

மேற்கு ஆசியாவில் மோதல்கள் மற்றும் போர்ப் பதற்றங்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், அப்பகுதியில் உள்ள பல்வேறு நாடுகளில் வசிக்கும் அமெரிக்கக் குடிமக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு அமெரிக்கத் தூதரகங்கள் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளன.

மேற்கு ஆசியாவில் நிலவிவரும் கடும் போர்ச் சூழலைக் கருத்தில் கொண்டு, லெபனான், ஈராக், ஈரான், காசா, சிரியா மற்றும் ஏமன் உள்ளிட்ட ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் அமெரிக்கக் குடிமக்கள் அனைவரும் எவ்விதத் தாமதமும் இன்றி உடனடியாக அந்த நாடுகளை விட்டு வெளியேறுமாறு தூதரகங்கள் அறிவுறுத்தியுள்ளன.

மேலும், மத்திய கிழக்கின் முக்கிய நாடான சவூதி அரேபியாவிற்குத் பயணம் மேற்கொள்வதை அமெரிக்கக் குடிமக்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தூதரகம் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பஹ்ரைன், குவைத், கத்தார், ஓமன் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் நிலவுவதால், அங்குள்ள அமெரிக்கர்கள் அனைவரும் தங்களது பாதுகாப்பில் கூடுதல் விழிப்புடன் இருக்குமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.