JUST IN: வியட்நாமில் சுற்றுலாப் பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து; 18 இந்தியர்கள் பலி - மீட்புப் பணிகள் தீவிரம் - அதிர்ச்சி வீடியோ!

 

வியட்நாம் நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான பூ குவாக் தீவுப் பகுதியில், இந்தியச் சுற்றுலாப் பயணிகள் பயணித்த விசைப்படகு ஒன்று கடல் சீற்றம் காரணமாகத் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 18 பயணிகள் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக முதற்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

A boat carrying Indian tourists capsized off Vietnam's Phu Quoc Island on Saturday, prompting a large-scale search and rescue operation by local authorities. Videos circulating online show the overturned vessel surrounded by rescue speedboats in rough sea conditions.#Vietnampic.twitter.com/Xzyssx946K

— Dr Kaalika (@DrKaalika) July 11, 2026


இந்தியாவிலிருந்து வியட்நாமுக்குச் சுற்றுலாச் சென்ற 32 பயணிகள் மற்றும் படகு ஊழியர்கள் 3 பேர் என மொத்தம் 35 பேருடன் இந்த விசைப்படகு இன்று காலை கடலுக்குள் புறப்பட்டது. இன்று முற்பகல் 11:30 மணியளவில் பூ குவாக் தீவின் கடற்கரையிலிருந்து சில நாட்டிக்கல் மைல் தொலைவில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென ஏற்பட்ட  கடல் அலைகள் மற்றும் பலத்த காற்றினால் படகு ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கடலில் தலைகீழாகக் கவிழ்ந்தது.

விபத்து குறித்துத் தகவல் அறிந்த வியட்நாம் கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டனர். விபத்தில் சிக்கியவர்களில் சிலர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். கடலில் மூழ்கிய எஞ்சிய 14 பேரைத் தேடும் பணி  நடைபெற்று வருகிறது. 18 பேர் உயிரிழந்ததாகத் உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்ட போதிலும், உயிரிழப்பு குறித்த இறுதி விபரங்களை வியட்நாம் அரசோ அல்லது இந்தியத் தூதரகமோ இன்னும்உறுதிப்படுத்தவில்லை.