6 தமிழக அமைச்சர்களுக்கு ‘கல்தா’ - புதியவர்களின் உத்தேசப் பட்டியல்.. விரைவில் அமைச்சரவையில் விரைவில் மாற்றம்!
Aug 28, 2026, 14:20 IST
தமிழகத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்தவுடன் அமைச்சரவையில் மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசின் செயல்பாடு மற்றும் செயல்திறனைக் கருத்தில் கொண்டு 4 முதல் 6 அமைச்சர்களின் பதவிகளைப் பறிக்க முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய அமைச்சர்களில் சிலரது பதவிக்காலம் முடிவுக்கு வரக்கூடும் என்பதால், அவர்களுக்குப் பதிலாகப் புதிதாகப் பொறுப்பேற்க உள்ள புதிய முகங்களின் உத்தேசப் பட்டியலும் தயாராகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதையும் தமிழக அரசு இதுவரை வெளியிடவில்லை என்றாலும், பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்தவுடன் அமைச்சரவை மாற்றம் குறித்த இறுதி முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.