ஜாமீன் கோரி கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மனு... டிசம்பர் 1-ம் தேதி விசாரணைக்கு வருகிறது!

 

பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு ஆபாச வாட்ஸ்அப் குறுஞ்செய்திகள் அனுப்பிய புகாரில் கைது செய்யப்பட்டுக் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் சி. அருள் விக்னேஷ், ஜாமீன் கோரி கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இம்மனு மீதான விசாரணை டிசம்பர் 1-ஆம் தேதி நடைபெற உள்ளது.

பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு ஆபாசக் குறுஞ்செய்திகள் அனுப்பிய புகாரில் கைதாகிக் கடலூர் மத்திய சிறையில் உள்ள தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் தரப்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு குறித்து அரசுத் தரப்பு பதிலளிக்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ள நிலையில், ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் டிசம்பர் 1-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு ஆபாச வாட்ஸ்அப் குறுஞ்செய்திகள் அனுப்பியதாகவும், முறையற்ற வகையில் நடந்து கொண்டதாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில், அருள் விக்னேஷ் வெள்ளிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டார்.

பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி நவம்பர் 23-ஆம் தேதி தலைமைச் செயலாளரிடம் அளித்த புகாரைத் தொடர்ந்து, பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, திருப்பூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரிஷ்டி சிங் தலைமையிலான குழுவினர், சென்னை நிர்வாகப் பிரிவு காவல்துறைத் தலைவர் காமினி மேற்பார்வையில் இந்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.