தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் வீட்டுப் பால்கனியை மறைக்கும் பணி: பரபரப்பு வீடியோ!

 

 

பாலியல் துன்புறுத்தல் புகாரில் சிக்கியுள்ள கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷின் வீட்டுப் பால்கனி மற்றும் முகப்புப் பகுதிகளை மறைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பெண் மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

allowfullscreen

நேற்று தனது வீட்டின் மாடியில் நின்றபடி ஆதரவாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்திய காட்சிகள் வெளியாகிப் பேசுபொருளானது. இந்த நிலையில், வீட்டிற்குள் நடக்கும் நிகழ்வுகள் வெளியே தெரியாமல் தடுப்பதற்கும், தொடர் போராட்டங்கள் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காகவும் இரும்புக் கம்பிகள் கொண்டு வீட்டின் முன்பகுதியை மறைக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மறுபுறம், எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை உடனடியாகக் கைது செய்யக் கோரி போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், காவல்துறையினர் சம்மன் வழங்கி விசாரணையைத் துரிதப்படுத்தியுள்ளனர்.