கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் 200 அப்ரண்டீஸ் பணியிடங்கள் - தேர்வு எழுதாமல் பணி வாய்ப்பு!
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் அமைந்துள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள 200 தொழிற் பழகுநர் பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தொழிற் பழகுநர் வாய்ப்புகளுக்காக மொத்தம் 200 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபிட்டர் - 46, எலக்ட்ரீஷியன் - 22, பாசா - 19, இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் (18), வெல்டர் (14), டர்னர், பிளம்பர், மெஷினிஸ்ட், டிராஃப்ட்ஸ்மேன் உள்ளிட்ட 18 வெவ்வேறு பிரிவுகளுக்கான வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி காலம் 1 ஆண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட பிரிவில்NCVT அல்லது SCVT அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்
எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு 2 ஆண்டு ஐடிஐ முடித்தவர்களுக்கு மாதந்தோறும் ரூ.11,040 வழங்கப்படும். 1 ஆண்டு ஐடிஐ முடித்தவர்களுக்கு: மாதந்தோறும் ரூ.10,560 வழங்கப்படும். இந்த வேலைவாய்ப்பிற்கு எந்தவிதமான எழுத்துத் தேர்வும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
விண்ணப்பதாரர்கள் ஐடிஐ படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் நேரடியாகத் தேர்வு செய்யப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனைக்குப் பின் பணி நியமனம் வழங்கப்படுவர். விருப்பமுள்ளவர்கள் முதலில் ஒன்றிய அரசின் apprenticeshipindia.gov.in இணையதளத்தில் பதிவு செய்து ஆதார் கேவொய்சி நிறைவு செய்ய வேண்டும். அதன்பின் கிடைக்கும் 'Unique Registration Number' மூலம் www.igcar.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 19 ஆகஸ்ட் 2026 இரவு 11:59 மணி வரை என்பது குறிப்பிடத்தக்கது.