திருச்சி கிழக்கில் கமல்ஹாசன் போட்டியில்லை! இனிகோ இருதயராஜுக்கு மீண்டும் வாய்ப்பா? பதற்றத்தில் திமுக!
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு திமுக வேட்பாளர் தேர்வு தொடர்பான ஆலோசனைகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இத்தொகுதியில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசனைப் போட்டியிட வைக்க திமுக தரப்பில் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக கமல்ஹாசன் தரப்பை அணுகியபோது, தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் தனக்கு தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என அவர் தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கட்சிக்கும் கூட்டணிக்கும் தேவைப்பட்டால் இடைத்தேர்தல் பிரசாரத்தில் முழு வேகத்துடன் ஈடுபடத் தயாராக இருப்பதாகவும் கூறி, போட்டியிடும் வாய்ப்பிலிருந்து விலகியதாகத் தெரிகிறது.
இதையடுத்து, திருச்சி கிழக்கு தொகுதியில் மீண்டும் இனிகோ இருதயராஜையே வேட்பாளராக நிறுத்தலாமா என்பது குறித்து திமுக தலைமை ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
எனினும், கமல்ஹாசனின் மறுப்பு மற்றும் இனிகோ இருதயராஜுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்குவது தொடர்பாக திமுக தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. வேட்பாளர் யார் என்பது கட்சித் தலைமையின் இறுதி முடிவுக்குப் பிறகே தெரியவரும்.