பெண்களைத் தவறாகப் பேசுவதை அனுமதிக்கக் கூடாது - மேயர் பிரியா விவகாரத்தில் கனிமொழி கண்டனம்!
Sep 26, 2026, 16:35 IST
சமூக வலைதளங்களில் தவெக ஆதரவாளர்களால் சென்னை மேயர் பிரியா அவதூறாக விமர்சிக்கப்பட்டு வரும் விவகாரத்தில் திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். பொதுவெளியில் பெண் தலைவர்கள் மீதான தனிநபர் தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் கூறியுள்ளார்.
எந்தப் பெண்ணையும் தவறாகப் பேச யாரையும் அனுமதிக்க மாட்டேன் என்று முதலமைச்சர் விஜய் கூறிவரும் நிலையில், மேயர் பிரியா மீதான இத்தகைய தொடர் தாக்குதல்களை அனுமதிப்பது ஏன் என்று கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
பொதுவெளியிலும் சமூக வலைதளங்களிலும் பெண் தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மீது நடத்தப்படும் தனிநபர் தாக்குதல்கள் மற்றும் அவதூறுகள் மிகவும் கண்டிக்கத்தக்கவை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.