கனிமொழி பெயரில் திடீர் மாற்றம்! தாயார் பெயரும் இணைப்பு! புதிய பெயர் என்ன?  

 

 

திமுக துணைப் பொதுச்செயலாளரும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி எம்.பியுமான கனிமொழியின் அதிகாரப்பூர்வ பெயரில் மாற்றம் இடம்பெற்றுள்ளது. இதுவரை கனிமொழி கருணாநிதி என அறியப்பட்ட அவர், தற்போது “கனிமொழி ராஜாத்தி கருணாநிதி” என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறார்.

இந்த மாற்றம் இந்திய நாடாளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ உறுப்பினர் சுயவிவரத்திலும் இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்ற இணையதளத்தில் அவரது பெயர் தற்போது “Kanimozhi Rajathi Karunanidhi” என குறிப்பிடப்பட்டுள்ளது.கனிமொழி, முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி மற்றும் ராஜாத்தி அம்மாள் ஆகியோரின் மகள்.

இதுவரை பயன்படுத்தப்பட்டு வந்த “கனிமொழி கருணாநிதி” என்ற பெயரில் தற்போது தாயார் ராஜாத்தி அம்மாளின் பெயரும் இணைக்கப்பட்டிருப்பது கவனம் பெற்றுள்ளது.அதிகாரப்பூர்வ நாடாளுமன்ற பதிவில் புதிய பெயர் இடம்பெற்றுள்ள நிலையில், அவரது பெயர் தொடர்பான இந்த மாற்றம் அரசியல் வட்டாரத்திலும் கவனம் பெற்றுள்ளது.