குடும்பத் தகராறு: மைத்துனரின் பிறப்புறுப்பை  கடித்த பெண்; 55 தையல்கள் போட்டு சிகிச்சை!

 

 

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் குடும்பத் தகராறின்போது, மைத்துனர் ரஜ்னீஷின் அந்தரங்க உறுப்பைக் காயத்ரி என்ற பெண் கடித்ததாகப் புகார் எழுந்துள்ளது. இதில் ரஜ்னீஷ் படுகாயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

allowfullscreen

காயத்ரியின் மகனை ரஜ்னீஷ் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் முற்றிய நிலையில், ரஜ்னீஷை காயத்ரி கடித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்த ரஜ்னீஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 55 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ரஜ்னீஷின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவத்தின் முழுப் பின்னணி குறித்து விசாரணைக்குப் பிறகே தெளிவு கிடைக்கும்.