கடை ஷட்டரில் பதுங்கிய 10 அடி மலைப்பாம்பு… லாவகமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்!

 

 

கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பில், கடையின் இரும்பு ஷட்டரில் பதுங்கியிருந்த சுமார் 10 அடி நீள மலைப்பாம்பை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.

சுவாமிதோப்பில் பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதி அமைந்துள்ளது. இதன் அருகே உள்ள ஒரு கடையின் இரும்பு ஷட்டரில், நேற்று (நவம்பர் 15) இரவு பெரிய மலைப்பாம்பு ஒன்று சுருண்டு பதுங்கியிருந்தது.

allowfullscreen

இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கடையின் ஷட்டரில் இருந்த சுமார் 10 அடி நீள மலைப்பாம்பை லாவகமாகப் பிடித்து மீட்டனர்.

பின்னர் மீட்கப்பட்ட மலைப்பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் அந்தப் பாம்பை அடர்ந்த வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவித்தனர். இதையடுத்து அப்பகுதியில் நிலவிய பரபரப்பு முடிவுக்கு வந்தது.