“தண்ணீர் தர முடியாது என்ற கர்நாடகா... இறுதியில் இயற்கை வென்றது!” - பெ. சண்முகம்!

 

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு வருவது குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடகாவில் உள்ள கபினி அணையிலிருந்து வினாடிக்கு 10,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும், விரைவில் அணை நிரம்பிவிடும் என அம்மாநில முதலமைச்சரே தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை ஆணையம் தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 3,500 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என்று இரு நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டது. அப்போது, "கர்நாடக அணைகளில் தண்ணீரே இல்லை; குடிநீருக்கே பற்றாக்குறை ஏற்படும்" என்று கூறித் தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுப்புத் தெரிவித்தது.

காவிரி மேலாண்மை ஆணையக் கண்காணிப்புக் குழுவின் செயல்பாடுகளை கேள்விக்குள்ளாக்கியுள்ள அவர், "இரண்டு நாட்களில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அணை எப்படி இரண்டே நாட்களில் நிரம்பியது? எப்படி இருப்பினும் இறுதியில் இயற்கை வென்றுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.