காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்குத் தடை: உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா கூடுதல் மனு!

 

 

கட்டுரை: காவிரி-வைகை-குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்திற்குத் தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளது. காவிரி தீர்ப்பின்படி தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட தண்ணீரின் அளவைவிடக் கூடுதலாக எடுத்துக்கொள்ள உரிமை இல்லை என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காவிரியின் குறுக்கே எந்தவொரு புதிய நீர்ப் பாசனத் திட்டங்களையும், தடுப்பணைகளையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்த நிரந்தரத் தடை விதிக்க வேண்டும் என்றும் கர்நாடகா கோரிக்கை விடுத்துள்ளது. சரபங்கா திட்டம், ஆதனூர் தடுப்பணை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் அதில் குறிப்பிட்டுள்ளது.

மத்திய அரசின் அனுமதியின்றி முதல் கட்டப் பணிகள் நடைபெற்று வருவதாகக் குற்றம்சாட்டியுள்ள கர்நாடக அரசு, ஏற்கனவே கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை இடிக்கவும், இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளதுஇரு மாநில நதிநீர் விவகாரத்தில் இந்தப் புதிய மனு கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது